Posts

  ஸ்ரீ: ஸ்ரீமதே ஸ்ரீவராஹ மஹா தேசிகாய நம: ஸ்ரீமதே ரங்க ராமாநுஜ மஹா தேசிகாய நம: ஸ்ரீமதே வேதாந்த ராமாநுஜ மஹாதேசிகாய நம: II அச்சுதனும் இரக்கத்துடன் "என் அரிய குழந்தாய் என்னைக் காணவேண்டிப் பச்சைப் பருவமுதல் விரதசாரியாய் உலக ஸுகங்களை மறந்தனை.  நீ கொஞ்சகாலம் உலகத்திலிருந்து அந்த இன்பங்களையும் நுகர்ந்து என்னையும் மறவாது என் அன்பினாலேயே திரும்பி என்னிடம் வருவாய் என்றாராம்.. சிஷ்யன்:(அன்றே புறப்படவேண்டிய சிஷ்யன் இரு தினங்கள் தாழ்த்தி அன்று மாலை அங்கே அணுகி மிகவும் லஜ்ஜையுற்ற குறிப்புடன்) ஒரு ப்ரார்த்தனை-அடியேனுக்கு வேண்டிய பொருள்.... ஸ்ரீமதாண்டவன்: என்ன அது! ஒரு ஆண்டியிடம் நீ விரும்பும் பொருள்........ சிஷ்யர்: அடியேனுக்கு கேட்க வெட்கமாயிருக்கிறது. ஸ்ரீமதாண்டவன்: (மிகவும் ஆதரவும் உரத்ததுமான குரலில்) நான் உன்னை வண்டியில் ஏற்றி ஆத்துவாசலில் இறங்கும்படியான....... சிஷ்யர்:(அவ்வாறு அவர் சொல்லும்பொழுதே தான்  வழிச் செலவுக்கான பணத்தை எதிர்பார்த்ததாக ஸ்ரீமதாண்டவன் நினைத்தது கண்டு வெட்கமும் வருத்தமும் அடைந்து மெதுவான குரலில்) எனக்குப் பணம் வேண்டாம்........ ஸ்ரீமதாண்டவன்:(சிஷ்யன் முகத்திலிருந்த வேதனையை
 ஸ்ரீ: ஸ்ரீமதே ஸ்ரீவராஹ மஹா தேசிகாய நம: ஸ்ரீமதே ரங்க ராமாநுஜ மஹா தேசிகாய நம: ஸ்ரீமதே வேதாந்த ராமாநுஜ மஹாதேசிகாய நம: சிஷ்யர்: (மிகவும் பயந்த குரலில்) ஊருக்குப் போகலாம் என்று நினைக்கிறேன் விடைதரலாமோ ? ஸ்ரீமதாண்டவன்: நியாயமே. இதற்காக நீ ஏன் பயப்படவேண்டும் ? இத்தனை நாட்கள் நீ என்னுடன் இருந்தது மிகவும் ஆச்சர்யம்?  உனக்கு வீட்டில் கடமைகள் உள்ளனவல்லவா ? நீ ஸந்தோஷமாய் சென்று வா. (மறுநாட்காலை சிஷ்யர் மிகவும் வாடிய மனத்துடன் வழக்கமான உற்சாகமின்றி நிற்க) ஸ்ரீமதாண்டவன்: ஏன் முகத்திலே வாட்டம் ? நீதான் ஊருக்குப் போகப் போகின்றாயே ? சிஷ்யன்: அதனால்தான், அடியேனுக்கு இங்கேயே இருந்து நல்ல வார்த்தைகளைக் கேட்டு மகிழ்வதுதான் நலம் என்று தோன்றுகிறது. ஸ்ரீமதாண்டவன்: உன்னை யார் போகச் சொன்னது ? இங்கேயே இருந்து விடேன்(என்று சொல்லிச் சிரித்தார்.  சிஷ்யர் கண்களில் போராடிய கண்ணீர்த்திவலைகளைக் கண்டு அய்யய்யோ ஏன் அழுகிறாய் ?) (கண்ணைத் துடைத்துக் கொண்டு சிஷ்யன் பேசத் தொடங்க, மறுபடியும் அழுகை வர, அவன் அருகில் வந்து) பாவம் சிறு குழந்தை ! ஒரு வார்த்தை கேள். சிஷ்யர்: (முகத்தில் சிரிப்பை ஏற்றிக் கொண்டு) பெண் பிள்ளைகள் போல்
ஸ்ரீ: ஸ்ரீமதே வராஹ மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே ரங்க ராமாநுஜ மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே வேதாந்த ராமாநுஜ மஹாதேசிகாய நம: கடமையும் ஸ்வரூபமும் II பெரியோர்கள் ஈச்வரன் அனுப்பும் சோதனைகளை திவ்யாபரணங்களாய் கருதுவார்களாம்.  நம் ஸம்ப்ரதாயத்தில் எத்தனை பேர்கள் சந்தோஷத்துடன் கை கால்கள் வெட்டப் பெற்றும் கண்கள் அவிக்கப்பெற்றும் சித்திரவதை செய்யப்பட்டும் பொறுமையாக இருந்து தம் ஸ்வரூபத்தை அழியாது காத்திருக்கின்றனர்.   "ஈச்வரன் உண்டு எல்லாம் அவன் நியமனத்தால் நடக்கிறது" என்ற மனப்பான்மை ஸகல ஸௌக்யத்திற்கும் அடிப்படையாகும்.  அது, உபன்யஸிக்கிற எனக்கும் வரவில்லை, யார்க்கும் வருவது அறிது.  அவன் தயையினாலேயே நம் மனதில் உதிக்க வேண்டும். மனுஷ்யன் கர்வப்பிண்டமல்லவா ?(சிஷ்யர் மௌனமாக நின்றார். சற்று நேரம் அவரைக் கவனித்துவிட்டு) ஆமாம். மனிதன் உழைப்பதற்குத்தானே பிறந்தான். சாப்பிட்டு தூங்கவா ? சாப்பாட்டையும் தூக்கத்தையும் கூட அழகான திவ்ய ஸேவையாக நம் பெரியோகள் வகுத்தார்கள்.  "பஞ்ச கால பராயணன்" என்று கொண்டாடப்பெற்ற வைஷ்ணவனுக்கு ஓய்வு ஏது? ஸூர்யனைப் பார் ! சந்திரனைப் பார் ! நக்ஷத்திரங்களைப் பார் ! நதிகளைப் பார் !
ஸ்ரீ: ஸ்ரீமதே வராஹ மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே ரங்க ராமாநுஜ மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே வேதாந்த ராமாநுஜ மஹாதேசிகாய நம: கடமையும் ஸ்வரூபமும் சிஷ்யர்: வீட்டிற்கு உழைப்பது வீண் என்கிறார்களே. ஸ்ரீமதாண்டவன்: எல்லாம் அவரவர் நோக்கத்தைப் பொறுத்தது.  அதுவே ப்ரயோஜநமாகக் கொள்ளாமல் அது ஈச்வரனுடைய முகோல்லாஸம்"பெண்டாட்டி பிள்ளைகள் ஈச்வரனால் எனக்குக் கொடுக்கப்பட்ட சிறு சொத்து. அதை பரிபாலிப்பது, அவன் எனக்கு இட்ட கட்டளை" என்று அதர்ம வழியில்லாத வழியில் அதை நடத்தினால் அதில் என்ன குற்றம் ? திருமங்கையாழ்வார் அருளிச் செய்யும் "தாயே தந்தை என்றும்" சொற்றொடரில் தாய் தந்தை தாரம் மக்கள் இவர்க்காக ஸ்வயம் ப்ரயோஜநமாய் பாடுபட்டு அவரை நமக்கு தாரகமாக நினைக்கும் நினைவு கூடாது என்றார்.  வாழ்க்கையில் உதாரமான தர்ம பரமான செயல்களையே புரிந்து மனிதன் நாள் தோறும் உயரவேண்டும். சிஷ்யர்: நல்ல காரியங்கள் செய்தால் அதை அறிந்து கொண்டாடுபவர் யார்? ஸ்ரீமதாண்டவன்: ஐயோ ! மறுபடியும் பழைய பல்லவிக்கே வந்து விட்டாயே ! நல்ல கார்யங்கள் ஸ்வயம் ப்ரயோஜனமாயிற்றே. அதற்கு ஒரு பலாந்தரம் வேண்டுமா என்ன ? தெருவில் தட
Image
ஸ்ரீ: ஸ்ரீமதே வராஹ மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே ரங்க ராமாநுஜ மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே வேதாந்த ராமாநுஜ மஹாதேசிகாய நம: ஈச்வரனிடத்து வேண்டுவது அநந்த கிருஷ்ணாபுரம். அங்கே ஒரு தாத்தாச்சாரி ஸ்வாமி. சிறந்த அறிவாளி.  ஆசாரத்திலும் மேம்பட்டவர்.  நல்ல ஸம்ருத்தி உடையவர்.  ஆண்டவனிடம் அன்பு பூண்டவர். ஸ்ரீமதாண்டவன்:  நாம் தெய்வத்தை ஏமாற்றுகிறோம் என்று  தோன்றுகிறது.  ஆழ்வார்கள் போல், கோபிகைகள் போல எம்பெருமான் ஒருவனையே வேண்டியா நிற்கின்றோம்.  "நீ இருந்தால் போதும். எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம்" என்றார்கள்.  நாமோ ஒரு கையில் உலக ஆசைகளையும் ஒரு கையில் தெய்வத்தையும் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.  விஷயம் தெய்வம் இரண்டையும் ஒரே காலத்தில் ஸேவிக்க முடியுமா ?  அவகாசம் நேரிட்டால் தெய்வத்தை ஆற்றிலே எறிந்து விஷய ஸுகங்களைத் தேடி அலைகிறோம் அல்லவா ? நம்முடைய இந்த இயற்கையைத் தானே "பும்ஸாம் திருஷ்டி சித்தாப ஹாரி" யான ராகவனை "பொன்மான் வேண்டும். நீ அப்பாற் சென்று அதைப் பிடித்து என்கையில் கொடு"என்றார்.  பொன்னில் இச்சை வந்தது. புருஷோத்தமன் அப்பால் அகன்றான். அன்றுதான் விச்லேஷமாகிய கொட
Image
ஸ்ரீ: ஸ்ரீமதே வராஹ மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே ரங்க ராமாநுஜ மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே வேதாந்த ராமாநுஜ மஹாதேசிகாய நம: பெருமாளின் கருணை யாரிடத்தில் ? வாழைக்கொல்லைத் தெருவில் அய்யங்கார் வீட்டில் ஒரு கல்யாணக் கொண்டாட்டம். திருக்குளத்திலிருந்து எழுந்தருளும் ஸ்ரீமதாண்டவன் (வீட்டு எஜமானனை நோக்கி) என்ன உத்ஸாகமில்லையே ! விடிந்தால் சுபகாரியம் ! கவலையாயிருக்கிறாயே ! அய்யங்கார்: ஒன்றுமில்லை, பையன் காலையிலே வரவேண்டியவன் இன்னும் வரவில்லை. மணி ஏழு எட்டு ஆகப் போகிறது. ஸ்ரீமதாண்டவன்:  வந்துவிடுவான், கவலை வேண்டாம் (இருப்பிடம் சேர்ந்ததும் சிஷ்யரை நோக்கி) கோடான கோடி ஜீவராசிகளைச் சிருஷ்டித்த ஈச்வரனுக்கு அவர்களிடம் ப்ரீதி எந்தக் கணக்கில் இருக்கும் ? சிஷ்யர்:  (சற்றும் யோசியாது) நல்லவர்களிடம் அன்பு நிறைய இருக்கும்.  பாபிகளிடம் எல்லையற்ற கோபமும் அறுவறுப்புமிருக்கும். ஸ்ரீமதாண்டவன்: (சற்று அசைவற்று நின்று விட்டுப் பிறகு பெரியோர்கள் ஈச்வரனை இப்படி நினைக்கவில்லை.   தான் படைத்த ஜீவராசிகளில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு உயிரிடமும்  எல்லையற்ற அன்பு கொண்டவனாம்.  பாபம் அதிகமானால் பரிதாபம் அதிகமாக
Image
ஸ்ரீ: ஸ்ரீமதே வராஹ மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே ரங்க ராமாநுஜ மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே வேதாந்த ராமாநுஜ மஹாதேசிகாய நம: ஸ்ரீமதாண்டவன் தில்லை ஸ்தானத்திலிருந்து கல்யாண  புரத்துக்கு எழுந்தருள்கிறார்.  திருவையாறு அணுகுங்கால் கொட்டும் முழக்குமாக அந்த ஊர் ஸ்வாமி பவனி வருகிறார்.  சில ஸ்வாமிகள் பரபரப்புடன் ஆண்டவன் பக்கத்து சாமாராயர் தெரு வழியாகத் தெற்கே மாறிப் பாலக்கரை அடைந்து கல்யாணபுரம் போய்விடலாம் என்கிறார்கள். ஶ்ரீமதாண்டவன் (புன்னகையுடன்) ஏன் இப்படி பரபரப்புப் படுகிறீர்கள் ? இந்த ஸ்தலத்தைச் சேர்ந்த தெய்வம் தன் வீதிகளில் உலா வந்தால் நாம் இதற்காக பக்கத்தில் ஓடுவானேன் ? (புன்னகை பொருந்திய திருமுகத்துடன் நேரில் சென்று பல்லக்கும் கொட்டும் முழக்கும் கூட்டத்தையும் மெதுவாக நின்று பார்த்துச் சென்று சிஷ்யர்களைப் பார்த்து "தனக்கு மிக்காரும் ஒப்பாரும் இல்லாத மாமாயனான தயாநிதி ஸ்ரீமன் நாராயணன் இந்த லீலா விபூதியில் கார்யங்கள் நடப்பதற்காக ப்ரம்மா, சிவன், இந்திரன், வருணன், குபேரன் முதலிய உத்யோகஸ்தர்களைப் பட்டதாரிகளி நியமித்திருக்கிறான்.  அவர்களும் அவனுடைய ஆக்ஞை ஆகிற கைங்கர்யத்தில் இருக்கிறார்கள்.